டெல்லி சென்ற அ.திமு.க அவைத்தலவைர்

by Admin / 06-02-2023 10:05:27am
டெல்லி சென்ற  அ.திமு.க அவைத்தலவைர்

அ.தி.மு.கவின் ஒருங்கிணைந்த வேட்பாளரை ஈரோடு கிழக்கில் நிறுத்த பொதுக்குழுவைக்கூட்டி முடிவெடுக்க,உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து அ.தி.மு.க இரட்டை இலைக்காக விட்டுக்கொடுக்க தயார் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருந்தநிலையில்,அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஓர் அறிவிப்பை  பொதுக்குழு உறுப்பினர் களுக்காக  வெளியிட்டிருந்தார். அதன்படி தலைமைக்கழகத்திலிருந்து வழங்கப்படுகிற படிவத்தை ஞாயிறு 7.00 மணிக்குள்நேரில் வழங்க கேட்டிருந்தார்.ஒ.பி.எஸ்சுக்கும் படிவம் அனுப்பட்டிருந்தது. ஆனால்,தமிழ்மகன் உசேன் ஒருதலைபட்சமாகச்செயல்படுகிறார் என்று  ஒ.பி.எஸ்  ஆதரவாளர்கள் கருத்துத்தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் ,அ.தி.மு.க அவைத்தலைவர்  தமிழ்மகன் உசேன்,மாநிலங்கவை  உறுப்பினர்சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் பொதுக்குழு உறுப்பினர் கையெழுத்திட்டு வழங்கிய படிவத்தை வழங்குவதற்காக இன்று சென்றனர்.
 

 

Tags :

Share via

More stories