காண்ட்ராக்டருக்கு கொலை மிரட்டல் 7 பேர் மீது வழக்கு

by Editor / 12-04-2025 04:56:40pm
காண்ட்ராக்டருக்கு கொலை மிரட்டல் 7 பேர் மீது வழக்கு

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை,   கவியல்லூர் பகுதியை சேர்ந்தவர் மத்தியாஸ் மகன் பிரசாத் (33).   இவர் குருந்தன்கோடு ஊராட்சியில் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். தற்போது குளச்சல் அருகே குறும்பனையில்  சகாய மாதா தெருவில் மீனவர் ஓய்வு அறை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் நேற்று பணியை பார்வையிட குறும்பனைக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அசன் மோன், கிரிஜன், தாசன், செலஸ்டின், கினிட்டர், அந்தோணி அடிமை, கிளிட்டஸ் ஆகிய ஏழு பேர் சேர்ந்து பிரசாத் இடம் தகராறு செய்துள்ளனர்.மேலும் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து அவர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பந்தப்பட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via