83 வயதில் தந்தையாகும் நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசினோ தனது 83வது வயதில் தந்தையாகப் போகிறார். நூர் அல்ஃபல்லா என்ற 29 வயது தயாரிப்பாளருடன் சில காலமாக டேட்டிங் செய்து வரும் பசினோ, இன்னும் சில மாதங்களில் தந்தையாகிவிடுவார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அல் பசினோ கடந்த காலத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். புதியதாக பிறக்கப்போகும் குழந்தை பசினோவின் நான்காவது குழந்தையாகும். தற்போது நூர் அல்ஃபல்லா 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :