கையெழுத்து குப்பை தொட்டிக்கு போகும் - கிருஷ்ணசாமி

by Staff / 06-11-2023 11:11:38am
கையெழுத்து குப்பை தொட்டிக்கு போகும் - கிருஷ்ணசாமி

நீட் தேர்வுக்கு எதிராக திமுகவினரால் பெறப்படும் கையெழுத்து குப்பை தொட்டிக்குத்தான் போகும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற கட்சி முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், பேசிய அவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான மோதல்கள் மீண்டும் தலை துாக்கியுள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒன்று கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. நீட் தேர்வு விஷயத்தில் திமுக தோல்வி அடைந்துவிட்டது. அதனை மறைக்க இந்த கையெழுத்து இயக்கம் எனும் நாடகம் நடத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo