வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவர் கைது

by Staff / 07-12-2023 04:00:00pm
வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவர் கைது

திண்டுக்கல் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்த கூலித் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியைச் சோந்தவா் சின்னச்சாமி (35).கூலித் தொழிலாளி. கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் கொண்ட இவா், தனது வீட்டில் உள்ள செடிகளுக்கு இடையே 2 கஞ்சா செடிகளை வளா்த்து வந்தாா். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கு நேரில் சென்ற போலீஸாா் சின்னச்சாமியை கைது செய்தனா். மேலும், 2 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனா்.

 

Tags :

Share via

More stories