கொலம்பியாவில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
கொலம்பிய விமானப்படைக்குச் சொந்தமான சி-130 ஹெர்குலஸ் சரக்கு விமானம், புயர்டோ லெகுய்சாமோ நகரிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் மொத்தம் 126 பேர் இருந்தனர் . இதில் 113 ராணுவ வீரர்கள், 2 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 11 விமானப் பணியாளர்கள் அடங்குவர்.
இந்த விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர். மேலும் 57 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு, உள்ளே இருந்த வெடிமருந்துகள் வெடித்ததே காரணம் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :


















