ரயில்வேயில் முன்பதிவு செய்த டிக்கெட் கேன்சல் அறிவிப்பு .

இந்திய ரயில்வேயில் முன்பதிவு செய்த டிக்கெட் கேன்சல் செய்யும்போது பிடித்தம் செய்யப்படும் எழுத்தர் கட்டணத்தை குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ, இந்திய ரயில்வே பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய முறைப்படி இரண்டாம் வகுப்பு முன்பதிவின்போது கட்டணமாக ரூ.60 பிடித்தம் செய்யப்படுகிறது. தற்போது பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்வதால் ரயில்வேயின் நிர்வாகச் செலவு குறைந்துள்ளது. இதன் காரணமாக கட்டணங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம்.
Tags : Railway ticket cancellation notice.