போலி ரசீது சீட்டு தயாரித்து கனிமவள முறைகேட்டில் ஈடுபட்ட ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது.

by Editor / 15-12-2021 12:35:22am
போலி ரசீது சீட்டு தயாரித்து கனிமவள முறைகேட்டில் ஈடுபட்ட ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி மற்றும் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகம்,  கட்டளை பகுதியை சேர்ந்த   பலவேசம் என்பவரின் மகன் வெங்கடாசலம் என்பவர் சட்டவிரோதமாக போலியான ரசீது சீட்டு  தயாரித்து கனிமவள முறைகேட்டில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ப.சரவணன்  பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கங்கைகொண்டான்  காவல் நிலைய ஆய்வாளர் பெருமாளுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி எதிரி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர்  இன்று எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

 

Tags :

Share via
Logo