விமான ஊழியர் தன்னிடம் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே குற்றச்சாட்டு

by Staff / 10-06-2022 01:05:22pm
விமான ஊழியர் தன்னிடம் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே குற்றச்சாட்டு

பயணத்தின் போது தன்னிடம் விமானம் ஊழியர் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர் மும்பையில் இருந்து தான் இன்டிகோ விமானத்தில் பயணித்ததாக அதிலிருந்து விபுள் என்ற விமான ஊழியர் அச்சுறுத்தும் வகையிலும் ஆணவத்துடன் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். காரணமின்றி அந்த ஊழியர் அவ்வாறு நடந்து கொண்டது மிரள வைக்கும் வகையில் இருந்ததாகவும்  பூஜா ஹெக்டே இண்டிகோ  நிறுவனத்தை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார்..

 

Tags :

Share via