வெனிசுலாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி

by Admin / 27-08-2021 03:59:45pm
வெனிசுலாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி

 

வெனிசுலா நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மரிடா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழை காரணமாக மாகாணத்தின் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
 
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மரிடா மாகாணத்தில் 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நகரின் பல்வேறு இடங்களில் சாலை, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மரிடா மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 17 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் மாயமாகியுள்ளனர்.

இதையடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

 

Tags :

Share via

More stories

Logo