புதுச்சேரி முதல்வருக்கு வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அதில், “மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags :