தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் நேற்று 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இது குறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு :
அதன்படி, தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 47 ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் மட்டும் 2,482 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 49, 985 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 3,289 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 84 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 945 ஆக அதிகரித்துள்ளது.
Tags :