குரோக் ஏஐ பயன்படுத்தி தவறான படங்களை உருவாக்குவது குறித்து எலன் மஸ்க் எச்சரிக்கை

by Admin / 05-01-2026 08:48:14am
குரோக் ஏஐ பயன்படுத்தி தவறான படங்களை உருவாக்குவது குறித்து எலன் மஸ்க் எச்சரிக்கை

எக்ஸ் தளத்தில் குரோக் ஏஐ பயன்படுத்தி தவறான படங்களை உருவாக்குவது குறித்து எலன் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடக்கத்தில் குரோக் ஏஐ எந்தவித கட்டுப்பாடும் இன்றி படங்களை உருவாக்கியது. ஆனால், தற்பொழுது பல நாடுகளில் இருந்து இதற்கு கண்டனங்கள் வந்ததை தொடர்ந்து வன்முறை, ஆபாசம் அல்லது தனிநபர் கண்ணியத்தை பாதிக்கும் படங்களை உருவாக்கக் கூடாது என விதிகளை கடுமையாக வகுத்துள்ளது ..எக்ஸ் தள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்  விதிகளை மீறி தொடர்ந்து படங்களை உருவாக்குபவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு புகழ்பெற்ற நபர்களின் போலி படங்களை உருவாக்கினால் அது சட்டப்படி குற்றமாக கருதப்பட்டு கடும் தண்டனைகளுக்கு வழிவகுக்கும்.என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories