ரேஷன் கடை சேவையில் குறைபாடா? பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

by Admin / 03-08-2021 02:44:30pm
ரேஷன் கடை சேவையில் குறைபாடா? பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்



கோவையில் இருந்து அச்சிடப்பட்ட புகார் புத்தகங்கள் திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோவையில் இருந்து அச்சிடப்பட்ட புகார் புத்தகங்கள் திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வாலிபாளையத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் புகார் புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பு கடைக்கு வெளியே ஒட்டப்பட்டது. தங்கள் பெயர், முகவரி, செல்போன் எண் , ரேஷன் கார்டு எண் விவரங்களை பதிந்து ரேஷன் கடை, பொருள் வழங்குதல், விற்பனையாளர், ஊழியர் தொடர்பாக அல்லது துறை ரீதியான புகார் இருப்பினும் கார்டுதாரர் எழுதி வைக்கலாம்.
 
உயர் அலுவலர் ஆய்வின் போது புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via