மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

மிக்ஜாம் புயல் காரணமாக, கனமழையினால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை பகுதிப் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், திருவண்ணாமலையில் இருந்து அழைத்து வரப்பட்ட சமையல் கலைஞர் மூலமாக சமையல் செய்து சாம்பார், பிரிஞ்சி சாதம் போன்ற கலவை சாதங்கள் 10,000 உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயல்பு நிலை திரும்பும் வரை நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
Tags :