சினிமா ஸ்டார் வந்தால் கூட விசிகவிற்கு போட்டியாக வர முடியாது- திருமாவளவன்.

சினிமா ஸ்டார் வந்தால் கூட விசிகவிற்கு போட்டியாக வர முடியாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற விசிக ஆய்வுக்கூட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், "விசிகவின் களமே வேறு. வேங்கைவயல் குறித்து ஏன் பெரிய அளவில் திருமா பேசவில்லை, போராட்டம் செய்யவில்லை என சிலர் தெரிவிக்கிறார்கள். அதிமுக கூட வேங்கைவயல் குறித்து பெரியளவில் போராட்டம் செய்யவில்லை. பாஜகவோடும், பாமகவோடும் எப்போதும் உறவு இல்லை, வன்னிய சமூகத்தினரோடு எங்களுக்கு உறவு உண்டு" என்று கூறியுள்ளார்
Tags : சினிமா ஸ்டார் வந்தால் கூட விசிகவிற்கு போட்டியாக வர முடியாது- திருமாவளவன்.