வரி செலுத்தினால் ரூ. 5000 ஊக்கத்தொகை.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு
தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது.அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது 2022-2023 ஆம் நிதியாண்டு முடிவடைந்துள்ள நிலையில் ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் வீடுகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும் என்று நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகள் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றது.இந்நிலையில் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5% ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 15 நாட்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த இந்த சலுகையை சென்னை மாநகராட்சி 30 நாட்களாக நீட்டித்துள்ளது. எனவே சொத்து உரிமையாளர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் வரி செலுத்தி ஊக்க தொகையை பெறலாம்.
Tags :