நாளை இந்திய -சீன ராணுவ தளபதிகளின் 12வது சுற்று பேச்சு

இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் ஆன சுசுல் எதிரே சீன ராணுவ முகாம் மோல்டோ உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சீன அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையின்படி லடாக்கின் பாலம் ஏரிக்கரை பகுதியில் இருந்து இருதரப்பு ராணுவமும் வாபஸ் பெறப்பட்டது.அதைத்தொடர்ந்து படை விலக்கம் குறித்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள இந்திய சீன ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தையின் போது கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கோக்ரா மற்றும் வெந்நீர் ஊற்று பகுதியில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நம்பகமான வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.
Tags :