விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது..

by Admin / 06-09-2024 10:40:02pm
விநாயகர் சதுர்த்தி  இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது..

முழு முதல் கடவுள் என்று வழிபடக்கூடிய விநாயகர் சதுர்த்தி நாளை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. மும்மூர்த்திகளுக்கு இந்து மதத்தில் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே போன்று விநாயகருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பக்தர்களால் முதல் கடவுள் அனைத்தையும் வெற்றிகரமாக ஆக்கி தரக்கூடிய வல்லமை உடைய கடவுள். வினை தீர்க்கும் கடவுள் என்று அழைக்கப்படுகிறார் ,விநாயகர் .வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மண்ணால் ஆன விநாயகரை செய்து வீட்டில் அவல் ,பொறி- கடலை ,மோதகம் வைத்து வழிபடப்படுகிறார்.. விநாயகர் வழிபாடு இந்து மதத்தில் கலிங்க போருக்கு பின்னால் ஏற்பட்டது என்று சொன்னாலும் எந்த தெய்வத்தின் உடைய சன்னதிக்கு சென்றாலும் ,அங்கு முதலில் வழிபடக்கூடிய தெய்வமாக விநாயகர் இருக்கின்றார் .முருகனுக்கு மூத்தவனாகவும் அதிபுத்தி நிறைந்த- ஞானம் கொண்டவராகவும் விநாயகர் போற்றப்படுகிறார் .எந்த ஒரு தொழிலை செயலை செய்யும் முன்பாக விநாயகரை வழிபட்டால் அந்த செயல் வெற்றி பெறும் என்பது ஐதீகம்..

 

Tags :

Share via