மீண்டும் எல்லையில் பறந்துவந்த ட்ரோன்கள்.

பாகிஸ்தான் காஷ்மீரில் ட்ரோன் மூலம் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவிய நிலையில், தாக்குதலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல், இந்திய ராணுவத் தளபதி உடன் மாலை 3.35 மணிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாகத் தெரிவித்தார்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் அனைத்து விதமான ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 12ஆம் தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
Tags : மீண்டும் எல்லையில் பறந்துவந்த ட்ரோன்கள்