5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிற்சங்க பிரமுகர் கைது.
தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியினரின் தொழிற்சங்கத்தினர் அந்தந்த அரசு அலுவலகங்களை தங்களது கட்டுபாட்டில் வைத்துக்கொவது வழக்கம்.இதில் முழுமையாக தொழிற்சங்கத்தினர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது வழக்கம்.அதிக வசூலாகும் முக்கியமானத்தடங்களில் செல்லும் பேரூந்துக்களை இயக்கம் ஓட்டுநர் நடத்துனர்களிடம் மாத..மாதம் கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு அவர்களை அந்தந்த பேரூந்துக்களை இயக்கிட வழிவிட்டு விடுவார்கள் இதில்ஆளும்கட்சி..எதிர் கட்சிகள் என்ற பாகுபாடுகள் இருக்காது...பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்துவருவதும் இதன்காரணமாக தொழிற் சங்கத்தின் தலைமைகள்வரை கடந்த காலங்களில் புகார்கள் போனதும் சில பொறுப்பாளர்கள் மாற்றப்படுவதும் தொன்றுதொட்டு தொழிற்சங்கத்தில் நடந்துவரும் வழக்கம்.இந்த நிலையில்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றும் பரமசிவம்,என்பவரிடம் சேலம் டூ திருவாரூர் பேருந்தினை இயக்க தாரமங்கலம் பணிமனை தொமுச செயலாளர் குணசேகரன் என்பவர் ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து
இது குறித்து பரமசிவம் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார்.அவர்களது ஆலோசனைப்படி இன்று மாலை பரமசிவம் ரூபாய் ஐந்தாயிரத்தை குணசேகரனிடம் வழங்கியபோது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் குணசேகரனை கைது.செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :