ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் பதிவிற்கான இணையதள முகவரி அறிவிப்பு

மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளை madurai.nic.in இணையதளம் மூலம் பெயர்களை பதிவு செய்யலாம்.
மாடுபிடி வீரர்களுக்கான ஆவணங்கள் : புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், கொரானா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திய சான்றிதழ் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
காளைகளுக்கான ஆவணங்கள்: காளைகளுக்கான மருத்துவ சான்று மற்றும் காளையின் உரிமையாளர், உதவியாளரின் புகைப்படங்கள், இருவரின் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்யப்படும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடிவீர்ர்கள்,காளை உரிமையாளர், உதவியாளர் மற்றும் பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரு நாட்களுக்குள் RT PCR Test - நெகடிவ் சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதி.
ஆன்லைனில் பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் டவுண்லோட் செய்ய இயலும்,டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
Tags :