பரவும் ஜிகா வைரஸ் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

by Staff / 03-07-2024 03:57:07pm
பரவும் ஜிகா வைரஸ் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

வேகமாக பரவிவரும் ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி 7 நாட்களுக்கு நீடித்தால் அதனை அலட்சியமாக விடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via