முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

by Editor / 04-07-2025 01:43:06pm
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

வெறுப்பு பேச்சு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய காவல்துறையினர் தயங்கினார் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல் பேச வேண்டும்? என நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சில மாதங்களுக்கு முன் சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதால் திமுகவில் கட்சி பதவியை இழந்ததோடு, அமைச்சர் பதவியையும் பொன்முடி பறிகொடுத்தார்.

 

Tags :

Share via