இனி ரயிலில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்

ரயில் பயணி ஒருவர், பயணத்தின்போது ரயில் பெட்டியலோ அல்லது ரயில் நிலைய வளாகத்திலோ குப்பைக் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராத விதிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. குறிப்பாக பயணி கொட்டும் குப்பையின் அளவைப் பொறுத்து அபராதம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் ஏசி பெட்டிகளில் குப்பை போட்டு இருந்தால் அதிகமாக வசூலிக்கப்படும். ‘சுவிட்ச் பாரத் மிஷன்’ திட்டத்தின் கீழ் இது கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :