வயதோ 25... உயரமோ 2 அடி... வினோத நோயால் பாதிக்கப்பட்ட மகளுடன் போராடும் தந்தை

by Admin / 31-08-2021 04:28:51pm
வயதோ 25... உயரமோ 2 அடி... வினோத நோயால் பாதிக்கப்பட்ட மகளுடன் போராடும் தந்தை


   
அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1000 மட்டுமே வருவாயாக உள்ளது என்றும் மகளுக்கும், மகனுக்கும் 3 வேளை உணவுகூட வழங்கமுடியவில்லை என்றும் தந்தை வேதனையுடன் தெரிவித்தார்.

வயதோ 25... உயரமோ 2 அடி... வினோத நோயால் பாதிக்கப்பட்ட மகளுடன் போராடும் தந்தை
25 வயது பெண் சுதா குழந்தை போல் அமர்ந்துள்ளார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள புளியராஜக்காபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் காளியப்பன். கூலித்தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகாலட்சுமிக்கு கடந்த 1996-ம் ஆண்டு பிறந்த 3-வது குழந்தை பிறக்கும்போதே வினோத நோயால் பாதிக்கப்பட்டிருந்தது.
 
தற்போது 25 வயதாகும் சுதா 2 அடி உயரத்தில் மட்டுமே குழந்தைபோல காட்சியளிக்கிறார். மனைவி இறந்த பிறகு தனது மற்ற மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த காளியப்பன் வினோத நோயால் பாதிக்கப்பட் தனது 3-வது மகளை மட்டும் கவனிக்க வசதியில்லாமல் தவித்து வருகிறார். நீண்டநேரம் உட்காரவும் முடியாது. நிற்கவும் முடியாது. வாய் பேச, காதுகேட்க முடியாத சுதா தனக்கு வேண்டியதை கைசாடையில் மட்டுமே தந்தையிடம் கேட்டு பெறுகிறார்.

இவரது தம்பி கார்த்தி(19). 10-ம் வகுப்பு முடித்துவிட்டு தனது சகோதரிக்கு உதவி செய்து வருகிறார். வறுமையின் காரணமாக அவரும் படிப்பை தொடர முடியாமல் தற்போது கூலிவேலை பார்த்து வருகிறார்.

அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1000 மட்டுமே வருவாயாக உள்ளது என்றும் தனது மகளுக்கும், மகனுக்கும் 3 வேளை உணவுகூட வழங்கமுடியவில்லை என்றும் காளியப்பன் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், எனது மனைவி இருந்தவரை மகள் சுதாவை கவனித்து வந்தார். அவள் இறந்தபிறகு கவனிக்க ஆட்கள் இல்லாததால் நானே பராமரித்து வருகிறேன்.

25 வயது மகள் சுதா அவரது தம்பி கார்த்தியுடன் தந்தை காளியப்பன்.

கொய்யாப்பழம் விற்று வந்த நான் தற்போது அந்த வியாபாரத்திற்கும் செல்ல முடியவில்லை. 10-ம் வகுப்பு வரை படித்த எனது மகனையும் படிக்கவைக்க முடியாததால் அவனும் வேலைக்கு சென்று வருகிறான்.

எனது மகளுக்கு என்ன நோய் என்றும், அதற்கு என்ன தீர்வு என்றும் தெரியவில்லை. பிறந்தது முதல் அவளை வைத்து பராமரித்து வருகிறேன். எனக்கு பின்னால் அவரை யார் பார்த்து கொள்வார்கள் என்று பயமாக உள்ளது. அரசு கூடுதல் உதவித்தொகை மற்றும் அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவவேண்டும் என்றார்.

 

Tags :

Share via