ரஷ்யாவை துரத்தும் கொரோனா - 69 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

by Admin / 31-08-2021 04:29:44pm
ரஷ்யாவை துரத்தும் கொரோனா - 69 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு



ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 792 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.
 
இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,325 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 லட்சத்தைக் கடந்துள்ளது.
 
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 792 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது.
 
அங்கு கொரோனா தொற்றில் இருந்து 61.62 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5.56 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

Tags :

Share via

More stories