நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் உடமைகளை பறித்து தாக்குதல்.

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த முருகையன்,வெண்ணிலா,தேவி ஆகியோருக்கு சொந்தமான மூன்று பைபர் படகு களில் மீனவர்கள் பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன், ரத்தினம் உள்ளிட்ட 12 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றநிலையில் அவர்கள் மீது இந்திய எல்லைக்குள் புகுந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்.படகின் எஞ்சின், கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, வெள்ளி அரைஞாண் கயிறு, ஜிபிஎஸ் கருவி வலைகள் உள்ளிட்ட உடைமைகளை பறித்து அட்டகாசம். கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.
Tags : நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் உடமைகளை பறித்து தாக்குதல்.