இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான  குழுவினர் பன்னிரண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை .

by Admin / 26-02-2026 08:54:01am
இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான  குழுவினர் பன்னிரண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை .

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான  குழுவினர் புதுச்சேரியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து விட்டு இன்று சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பன்னிரண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தலில் பண பட்டுவாடாவை தவிர்த்தல்,,வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் தொடர்பான குளறுபடிகளை தவிர்த்தல், தேர்தல் அமைதியாக நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்விற்கு, பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரியுடன் வாக்குச்சாவடிகள் குறித்து, பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதற்குப் பின்னரே தமிழகத்தில் எந்த மாதத்தில் எந்த தேதியில் தேர்தல் நடத்துவது என்பதான தகவல்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories