போதை மாணவர்களால் அரசுப் பள்ளி ஆசிரியர் மண்டை உடைப்பு 2 மாணவர்கள் கைது

சிவகாசி: 12ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் போதையில் பள்ளி ஆசிரியரை மதுபாட்டியால் தலையில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே ஆசிரியர் சுந்தரமூர்த்தியுடன் மாணவர்களுக்கு முன்விரோதம் இருந்துள்ளது. மதுபோதையில் வந்த மாணவர்களை அவர் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து சென்ற போது தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :