நெல்லைக்கார நண்பா ஊட்டி 124-வது ஆண்டு மலர் கண்காட்சியை காண நல்லதொரு சந்தர்ப்பம்.

by Editor / 17-05-2022 09:04:14am
நெல்லைக்கார நண்பா ஊட்டி 124-வது ஆண்டு மலர் கண்காட்சியை காண நல்லதொரு சந்தர்ப்பம்.

ஊட்டியில் 20/05/2022 அன்று நடைபெறும் மலர் கண்காட்சியை குறைந்த செலவில் ஒரு நாள் சுற்றுலாவாக செல்லலாம்… போக்குவரத்து செலவு ருபாய் 500/- மட்டுமே.. 
 திருநெல்வேலியில் 19/05/2022 அன்று மாலை 7 மணிக்கு புறப்படும் ரயிலில் மேட்டுப்பாளையத்திற்க்கு இரண்டாம் வகுப்பு சாதாரண ரயில் கட்டணம் ருபாய் 185/- . 
 மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து  பஸ் ஸ்டாண்ட்  நடந்து செல்லும் தொலைவிலேயே உள்ளது. 
மேட்டுப்பாளையம் – ஊட்டி பஸ் கட்டணம் ருபாய் 50/-
மேட்டுப்பாளையம்- ஊட்டி பயண நேரம் குன்னூர் வழியாக சுமார் 2.30  மணி நேரம். 
மேட்டுப்பாளையம் – ஊட்டி ஒருவழி பாதை வழி குன்னூர். ஸ்பெஷல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும். 
ஊட்டியில் சேரிங்கிராஸ் பகுதியில் இறங்கி மலர் கண்காட்சி நடைபெறும் அரசு பொட்டானிக்கல் பூங்காவிற்கு நடந்தே செல்லலாம். 
அரசு பொட்டானிக்கல் பூங்கா நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ருபாய் 30/- , சிறியவர்களுக்கு ருபாய் 15/-
சுமார் 55 ஏக்கர் நிலப்பரப்பில் எங்கு பார்த்தாலும் காணகண்கொள்ளா காட்சியாக இருக்கும் ஊட்டி அரசு பொட்டானிக்கல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியில் விதவிதமான பல வண்ணங்களில் உள்ள மலர்களை கண்டு ரசிக்கலாம். 
 மாலை 4 மணிக்கு உள்ளாக ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்க்கு பஸ் ஏறி விடவேண்டும்.  
 ஊட்டி- மேட்டுப்பாளையம் ஒருவழி பாதை வழி கோத்தகிரி. 
இரவு 7.40 மணிக்கு புறப்படும் மோட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயிலில் ஊர் திரும்பலாம். 
 ரயில் கட்டணம் + 🚌 பஸ் கட்டணம் + நுழைவு கட்டணம் போகவர ருபாய் 500/- மட்டுமே ஆகும். 
 உணவு உட்பட மற்ற செலவுகள் அவர்அவர் விருப்பம் போல்.
 குறைந்த செலவில் பாதுகாப்பு மற்றும் சொளகரியமான ரயில் பயணம் மேற்கொள்வீர்கள்.

நெல்லைக்கார நண்பா ஊட்டி 124-வது ஆண்டு மலர் கண்காட்சியை காண நல்லதொரு சந்தர்ப்பம்.
 

Tags : Nellaikkara Nanba Ooty is a good opportunity to see the 124th Annual Flower Exhibition.

Share via