ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டு கலவரத்தினால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்வு
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு கலவரம் காரணமாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்காங் குடியரசின் அரசுப் படையினருக்கும் பழங்குடியினர் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையினால் வாழ்வாதாரம் இழந்த மக்கள் உணவு குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு அதிக அளவில் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அண்டை நாடான உகாண்டாவில் 7000 பேர் புகலிடம் கேட்டும் தஞ்சமடைந்துள்ளனர்.
Tags :



















