திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில் மிருக கொழுப்பு-முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

by Admin / 19-09-2024 11:35:46am
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில் மிருக கொழுப்பு-முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு உலக பிரசித்தம் பெற்றது. ஆனால் அந்த லட்டில் கடந்த ஆட்சியாளர்கள் மிருக கொழுப்பை பயன்படுத்தி மக்களுக்கு வழங்கிஉள்ளதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். தற்பொழுது இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில் லட்டில் மிருக கொழுப்பு பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததாகவும் அதனால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் திருப்பதியினுடைய புனிதத்தை கெடுக்கும் விதமாக முந்திய ஆட்சியாளர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார்கள் என்று கூறியுள்ளார். இதற்கு ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் தலைவர் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார் .இது போன்ற அரசியல் நோக்கத்திற்காக சொல்லப்படுகின்ற கருத்து திருப்பதியின் புனிதத்தை களங்கப்படுத்துவதாக ஆகும் என்றும் திருப்பதி வெங்கடாஜலபதியின் முன்பாக அதுபோன்ற மிருகக் கொழுப்பை பயன்படுத்தவில்லை என்று நாங்கள் சத்தியம் செய்கிறோம் சந்திரபாபு நாயுடு தன் குடும்பத்தோடு சத்தியம் செய்ய தயாரா? என்கிற ரீதியில் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. திருப்பதி தேவஸ்தானத்தின்  நெய்யை பரிசோதிப்பதற்கான சோதனை கூடம் இல்லாததால் தனியார் சோதனை கூடத்தில் இதுவரை நெய் சோதிக்கப்பட்டதாகவும் தற்பொழுது இது குறித்து தெரிந்த பின்பு தங்களுடைய ஊழியர்களை நெய் பரிசோதனை பயிற்சி வகுப்பில் சேர்த்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார், முதல்வர் சந்திரபாபு நாயுடு. .முதல்வரின் இந்த குற்றச்சாட்டு திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது..

தேசிய ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசும் பொழுது இது தகவலை வெளியிட்டார்..

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில் மிருக கொழுப்பு-முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
 

Tags :

Share via