காவலர் பல்பொருள் அங்காடியில் 40 லட்சம் முறைகேடு ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் மூன்று பெண் காவலர்கள் கைது

by Editor / 14-08-2022 02:45:30pm
காவலர் பல்பொருள் அங்காடியில் 40 லட்சம் முறைகேடு ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் மூன்று பெண் காவலர்கள் கைது

தஞ்சையில் காவல் பல்பொருள் அங்காடியில் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்து முறைகேடு செய்ததாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று பெண் காவலர்கள் கைது செய்யப்பட்டனர். தஞ்சை ஆயுதப்படை மைதானம் அருகில் செயல்படும் காவலர் நல பல்பொருள் அங்காடியில் ஆண்டு கணக்கு சரிபார்ப்பின் போது பொருட்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது .இது தொடர்பான விசாரணையில் அங்கு பணிபுரியும் வீரம்மாள் என்ற பெண் காவலர் பொருள்களை தனது வீட்டில் பதுக்கி வைத்துக்கொண்டு வெளிச்சந்தையில் விட்டதும் இதற்கு அங்கு பணிபுரியும் மற்ற காவலர்கள் உடன்  இருந்ததும் அம்பலமானது. இதையடுத்து ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி பெண் காவலர்கள் வீரம்மாள் கோகிலவாணி வளர்மதி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories