ஏழை எளியோரின் திருமண நிதி சுமையை குறைக்க திட்டம் மீண்டும் கல்யாண மஸ்து திட்டத்தை துவக்க அரசு உத்தரவு
ஏழை எளியோருக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கும் கல்யாண மஸ்து மீண்டும் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தின் 20 மாவட்டங்களில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் கல்யாணம் மஸ்து திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து கல்யாண மஸ்து முகூர்த்த பத்திரிக்கை பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏழை எளிய மக்களின் திருமண நிதி சுமையை குறைக்கும் வகையில் ஜோடிகளுக்கு இலவசமாக ஆடை தாலி மெட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன போஜனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :