இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.327 கோடி  லாபம்:  நிர்வாக இயக்குனர்  தகவல்

by Editor / 04-08-2021 04:32:28pm
 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.327 கோடி  லாபம்:  நிர்வாக இயக்குனர்  தகவல்

 

பொதுத் துறை வங்கியைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.327 கோடி நிகர லாபத்தை சம்பாதித்துள்ளது. வராக்கடன் 5.10%லிருந்து 3.15% ஆக குறைந்தது என்று நிர்வாக இயக்குனர் பார்தா ப்ரீத்தம் சென் குப்தா தெரிவித்தார்.


நடப்பு 2021 22ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூ.ன் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.5,155 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 2020 21ம் ஆண்டில் வங்கி ஈட்டிய வருமானம் ரூ.5,234 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும். வராக்கடன் ஒதுக்கீடு குறைந்ததை அடுத்து நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதத்தில் வங்கி ஈட்டிய நிகர லாபம் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.121 கோடியிலிருந்து 2 மடங்கு அதிகரித்து ரூ.327 கோடியாக எட்டியுள்ளது.


மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் வட்டி வருமானம் 5.6% குறைந்து ரூ.4,063 கோடியாக இருந்தது. வட்டி சாரா வருவாய் 17.2%ஆக அதிகரித்து ரூ.1,092 கோடியானது. இதற்கு இதர வருவாயில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றமே முக்கிய காரணமாகும்.
நடப்பு ஆண்டு ஜூன் 30ந் தேதிப்படி வங்கியின் மொத்த வராக்கடன் 13.90%லிருந்து 11.48%ஆக குறைந்தது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.18,291 கோடியிலிருந்து குறைந்து ரூ.15,952 கோடியாக உள்ளது.


நிகர அளவிலான வராக்கடன் 5.10%லிருந்து (ரூ.6,081 கோடி) 3.15%ஆக (ரூ.3,998கோடி) சரிந்துள்ளது. வராக்கடன் இடர்பாட்டுக்கான ஒதுக்கீடு முதல் காலாண்டில் ரூ.969.62 கோடியிலிருந்து ரூ.868 கோடியாக குறைந்தது என்றார் நிர்வாக இயக்குனர் பார்தா ப்ரீத்தம் சென் குப்தா.

 

Tags :

Share via