இரண்டு ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை
பாகிஸ்தானில் ஆண் குழந்தை ஒன்று இரண்டு ஆணுறுப்புகளுடன் பிறந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டிஃபாலியா (Diphallia) என்ற அரிய வகை மருத்துவ நிலை 60 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும். அந்த வகையில் பாகிஸ்தானில் பிறந்த ஒரு குழந்தைக்கு இரண்டு ஆணுறுப்புகள் இருப்பதாகவும், குழந்தையால் இரண்டு உறுப்பிலும் சிறுநீர் கழிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அக்குழந்தைக்கு ஆசனவாய் இல்லாததால், colonoscopy என்ற சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முதன்முறையாக 1609ஆம் ஆண்டு டிஃபாலியா நிலையுடன் குழந்தை பிறந்தது. தற்போதுவரை 100 பேருக்கு மட்டுமே இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது.
Tags :