ஆணவக் கொலை -ஜாதி வெறியால் தன் மகளை கொலை செய்த பெற்ற தாய்
நெல்லையில் 20 வயது இளம்பெண் அவரது தாயால் கழுத்தை நெரித்து ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணா என்ற அந்த இளம்பெண்ணை வீட்டில் உள்ளவர்கள் அவரது ஜாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ய வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அந்த பெண்ணோ வேறு ஒரு ஜாதியை சேர்ந்த இளைஞரை விரும்பியுள்ளார்.இதையடுத்து ஆத்திரமடைந்த அவரது தாய் அந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இறந்த பெண்ணின் தந்தை சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று அந்த பெண்ணை மணப்பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வர இருந்த நிலையில், இந்த கொலை நடந்துள்ளது.
Tags :