ராமாயணம் எளிய நடையில் தினமும்

இந்தியா ஓர் ஆன்மீக பூமி.அதை இதிகாசங்களும் புராணங்களும் தான் கட்டமைத்துக்கொண்டிருக்கின்றன.எத்தனையோ சோதனைகள் வந்த பொழுது கூட ..அதன் சுவர்களில் சின்னக்கீறல்கள் கூட விழாமல் காலம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது.தர்மங்களை ,கருணையை ,அன்பு, நல்ல நெறிகளை ,சகிப்புத்தன்மையை,சகோதரத்துவத்தை. ..பேணி காப்பதாலும் இந்த மதம்.
இவ்வளவு பெரிய மனித தொடர்ச்சியில் உயிர்ப்போடு உடன் பயணித்துக்கொண்டிருக்கின்றது.தனக்குள்ளே முரண்பாடு கொண்டு..தானே தெளிவாகி..தனக்கென ஒரு பாதையை சுயம்புவாகவே பெற்று இயங்கிக் கொண்டிருக்கின்றது .ராமாயணமு ம் பாரதமும்வெறும் காப்பியமன்று.
அவதார புருஷர்களைப் புகழ்ந்து பாட இயற்றப்பட்டதன்று...மனித சமூகத்தை ஒழுக்கநெறிக்கு உட்படுத்தி காமம், குரோதம், மாச்சரியங்களை விலக்கி..இறையோடு இரண்டர கலந்திட..ஜீவாத்மாக்களை பேராத்மா உடன் மனித வடிவெடுத்து உறவாடி...உன்னத பயணத்திற்குஅழைத்துச்செல்ல..பயிற்சி அளிக்கவே...இறை அவதாரங்கள்.அப்படிப்பட்ட அவதார புருஷனின் காப்பிய கதையாகிய ராமாயணம் இனி எளிய நடையில்...
Tags :