ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவிவகாரம் மதுரைக்கு விரையும் தனிப்படை..?

நெல்லை கிழக்குமாவட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயக்குமாரின் கழுத்து, கை, கால்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தலையை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா? என சந்தேகம்எழுந்துள்ளது. வேறு ஒரு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக தனிப்படைப்போலிசார் மதுரைக்கு விரைந்துள்ளதாக ஒருதகவல் வெளியாகியுள்ளது.
Tags : ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவிவகாரம் மதுரைக்கு விரையும் தனிப்படை..?