மருத்துவ கல்லூரி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

by Staff / 09-03-2024 01:56:20pm
மருத்துவ கல்லூரி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

குஜராத்தில் அமைந்துள்ளது மோர்பி. இங்கு மருத்துவ கல்லூரி ஒன்று கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிடத்தின் முதல் மாடியின் கட்டுமான பணிகளில் சில தொழிலாளர்கள் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு 8 மணியளவில் தொழிலாளர்கள் அந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய ஒரு தொழிலாளரையும் மீட்பு படையினர் மீட்டனர்.

 

Tags :

Share via

More stories