சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இலட்சத்தீவில்  நடப்பது என்ன ?

by Editor / 21-07-2021 07:45:40pm
சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இலட்சத்தீவில்  நடப்பது என்ன ?

 

இந்திய யூனியன் பிரதேசங்களின் ஒன்றான இலட்சத்தீவுகள் அரபிக்கடல் பகுதிக்கு அருகே  200 கி.மீ.  தொலைவில் அமைந்துள்ளது.  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால்  இந்த தீவு நிர்வாகம் செய்துவந்த நிலையில் திடீரென ஆர் எஸ் அஸ் அனுதாபி  பிரபுல் கோடா பட்டேல் பொறுப்பேற்றுள்ளார். இங்கு ஆதிவாசிகள் , மீனவப் பழங்குடியினர் உள்ளிட்ட நிறைவான கல்வி அறிவு பெற்ற ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட இலட்சத் தீவுகள் 32 சதுர கி.மீ  . பரப்பளவு கொண்டது .

யூனியன் பிரதேசமாக 1973 ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. குட்டி குட்டி தீவுகளாக 36 தீவுகள்  கொண்ட யூனியன் பிரதேசமான இலட்சத்தீவில் , மீன்பிடித் தொழிலை பிரதானமாக கொண்ட இஸ்லாமியர்கள் 99 சதவிதம் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர் . ஒரு சதவித இந்துக்களாக , கிறிஸ்தவர்கள்  உள்ளனர், இந்தியாவில் காஷ் மீர் போன்று இலட்சத்தீவின் சட்டதிட்டங்களின் படி அங்குள்ள நிலங்கள் அனைத்தும் அங்கு வாழும் மக்களுக்கே சொந்தம். அங்கு அமையப்பெற்ற இடங்களை பூர்வீக குடிகள் யார் விற்பனை செய்ய முன் வந்தாலும் , அங்கு குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே வாங்க முடியும்.  

வெளிச் சமூகத்தினர் எவரும் வாங்க உரிமை இல்லை. இங்கு உருவாகும் பிரச்சனைகளுக்கு கேரள உயர்நீதி  மன்றம் தீர்வு காண அங்கு உள்ள அரசியலமைப்புச் சட்டத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இங்கு மலையாளம் தவிர வழக்கத்தில் திவேயி மொழியும் நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கவராட்டி , அமினி , மினிக்கோய் தீவுகள் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தவை 

1973ம் ஆண்டு முதல்   மத்திய அரசால் இந்திய ஆட்சிப் பணி  , ராணுவப் பணி , இந்திய புலனாய்வுப் பணியில் உள்ள உயரதிகாரிகள் இலட்சத்தீவின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் , நிர்வாகி , பாராளுமன்ற உறுப்பினர் , பஞ்சாயத்து அமைப்பின் தலைவர்கள் என அவர்களுக்கான அதிகாரங்களுடன் ஆட்சி செய்தனர்.

இந்த நிலையில்தான் குஜராத் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர்  பிரபுல் கோடா பட்டேல். இவர் வந்து  பதவியேற்றவுடன்  பாரம்பரிய நிலங்களை அபகரித்து வெளியாருக்கு தர சட்டம் கொண்டு வந்துள்ளார். இதனால் அங்கு பெரும் போராட்டம் 
வெடித்துள்ளது.விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை , சமூக விரோத செயல்களை தடுப்பது,  ஊராட்சிகளை ஒழுங்குபடுத்தல் என்று விதிகள்  உருவாக்கி உள்ளனர்.

இதன் மூலம் அனைத்து அதிகாரங்களையும்  மக்களிடமிருந்து பறித்து, சொந்த நிலத்திலேயே அவர்களை உரிமைகள் அற்ற அடிமைகளாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது! இதற்கு எதிராக கேரளாவில் நடிகர் பிரிதிவிராஜ் உள்ளிட்ட பல நடிகர்களும், காங்கிரஸ்,கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளும் லட்சத் தீவு காப்பாற்றப்பட வேண்டும் என போராடி வருகின்றனர்.

முக்கியமாக மாட்டு இறைச்சியை இனி சாப்பிட முடியாது. மாட்டுக்கறி வைத்து இருந்தாலே பத்து ஆண்டுகள் வரை சிறை .கால்நடைகள் அவற்றின் இறைச்சி ஏற்றுமதி , இறக்குமதி முழுமையாக தடை என்று கடும் நெருக்கடி கொடுப்பதாக இஸ்லாமியர்கள் பெருமளவில் பாதிக்கப்ட்டுள்ளனர். பஞ்சாயத்து பதவிகளுக்கு கூட இரண்டு குழந்தைகள் பெற்றவர்கள் போட்டியிட முடியாது.இஸ்லாமியர்கள் அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது.


பள்ளிக் குழந்தைகளுக்கு வழக்கமாக மதிய உணவில் வழங்கப்படும் அசைவ உணவு வகைகள் அடியோடு நிறுத்தப்படுவதுடன் இனி சைவத்துக்கு மாறும் நிலை..


மேலும்  தீவுக்குள் நுழைய வேண்டுமெனில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு   14 நாட்கள் தனிமைப்படுத்த பின்பே தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்  . ஆனால் பிரபுல் நிர்வாகியாக வந்தவுடன் விதிமுறைகளை மாற்றி, கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்து விட்டால் 48 மணி நேரத்தில் தீவுகளில் வந்து தங்கலாம் என அறிவித்தார்.எனவே  6800 பேர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பலனளிக்காமல் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் அனைவரும் கல்வியறிவு படைத்தவர்கள் என்பதால் .கொலை , கொள்ளை , வழிப்பறி , கற்பழிப்பு  இல்லை, போதை பழக்கமும் இல்லை .இப்படி எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் அங்கு புதிய பிரச்னைக்கு   பிரபுல் கோடா பட்டேல் வழி வகுத்து தன காவி சாயத்தை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via