வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கடுசு மைத்ரி (20). இவர் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் காது வலி ஏற்பட்டுள்ளது. இதனை தாங்கமுடியாத மாணவி, நேற்று (ஜூன் 11) வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :