தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

by Editor / 13-02-2024 08:52:47am
 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. பிப்.14ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags : தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Share via