தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 03  நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

by Editor / 31-05-2024 10:39:48pm
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 03  நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளின் குற்றவாளியான வாசுதேவநல்லூர்பகுதியை  சேர்ந்த முத்துப்பாண்டியன் என்பவரின் மகனான இளங்கோவன், வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற வழக்குகளின் தொடர்புடைய குற்றவாளியான மலையடி குறிச்சியை  சேர்ந்த ராஜா என்பவரின் மகனான ஜெயச்சந்திரன் என்ற விஞ்ஞானி, மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகளின் குற்றவாளியான சங்கரன்கோவில் சங்கரன் என்பவரின் மகனான செந்தில்குமார்(42) ஆகியோர் மீது  பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுரேஷ்குமார்  பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர்  உத்தரவின் பேரில் மேற்படி 3 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்..
 

 

Tags : தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 03  நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

Share via

More stories