ஜிவியுடன் களமிறங்கும் இயக்குனர் கெளதம் மேனன்

இசையமைப்பாளாரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடித்து வருவதுமட்டுமில்லாமல், மாறன், வாடிவாசல், யானை, ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு "செல்ஃபி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இந்த படத்தை மதி மாறன் இயக்குகிறார். தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
Tags :