அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தீக்குளிக்க முயன்ற திமுக தொண்டர்.

by Staff / 16-08-2025 11:59:12pm
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தீக்குளிக்க முயன்ற திமுக தொண்டர்.

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், திமுக தொண்டர் ஒருவர் அமைச்சர் வீட்டின் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த திமுக தொண்டர்கள் பெட்ரோல் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தினர். திமுக தொண்டரும், அமைச்சரின் தீவிர ஆதரவாளருமான மேலக்கோட்டையைச் சேர்ந்த சரவணனை மீட்ட கட்சியினர், போலீசார் தண்ணீர் ஊற்றி அவரை சமாதானப்படுத்தினர்.

 

Tags : அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தீக்குளிக்க முயன்ற திமுக தொண்டர்.

Share via