தகனம் செய்யப்பட்டது சரத்பாபு உடல்

பிரபல நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், ஐதராபாத்திலிருந்து சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடல் இன்று தி.நகர் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து இறுதி ஊர்வலம் தொடங்கி கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட உடல், இறுதிச்சடங்குகள் அனைத்தும் முடிந்த பின் தகனம் செய்யப்பட்டது.
Tags :