லீக்கான வலிமை பட கதை..தல ரசிகர்கள் அதிர்ச்சி .

by Editor / 24-07-2021 04:38:47pm
லீக்கான வலிமை பட கதை..தல ரசிகர்கள் அதிர்ச்சி .

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதை தொடர்ந்து வரும் அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.இந்நிலையில் ஐஎம்டிபி பக்கத்தில் வலிமை படத்தின் கதை குறித்த ஒருவரி இடம் பெற்றுள்ளது.

இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அதில், அஜித் இளவயதில் பைக் ரேஸ் வீரராக இருந்துள்ளார். அப்போது சிலரின் சதியால் அதை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு போலீஸ் அதிகாரியாக மாறி அவர்களை பழிவாங்குவது தான் இந்த கதை என்று கூறப்படுகிறது. சொல்லப்போனால் விவேகம் படத்தில் எப்படி நண்பர்கள் அஜித்தை ஏமாற்றினார்கள் அதேபோன்று தான் இந்த கதையும் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

Tags :

Share via