கடல் அலையில் சிக்கி மருத்துவ மாணவர்கள் பலி
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் சுற்றுலாச் சென்றுள்ளனர். பின்னர், கணபதிபுரம் அருகே உள்ள கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, ஆறு மாணவர்களை கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :